தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சலிங் முடிந்தது

இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சலிங் முடிந்தது

இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சலிங் முடிந்தது


UPDATED : ஆக 05, 2011 12:00 AM

ADDED : ஆக 05, 2011 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2011 12:00 AM ADDED : ஆக 05, 2011 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கவுன்சிலிங், கடந்த ஜூன் 30 முதல் ஜூலை 6 வரை நடந்தது. இதன் முடிவில், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடான, 749 எம்.பி.பி.எஸ்., இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 72 இடங்கள் மற்றும் 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடான, 847 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக இருந்தன.

இந்த இடங்களை நிரப்புவதற்காக, ஜூலை 28ல் துவங்கிய, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நேற்று நிறைவடைந்தது. இதன் முடிவில், குலசேகரம், ஸ்ரீமுகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் எஸ்.டி., பிரிவில் ஒரு எம்.பி.பி.எஸ்., இடமும், மாதா மருத்துவக் கல்லூரியில் எஸ்.சி.ஏ., பிரிவில் ஒரு இடமும் காலியாக உள்ளன.

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 726 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இடம் கிடைத்தவர்களுக்கு, ஆக., 16ல் அந்தந்த கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன்பின், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில், காலியாக உள்ள இடங்களை இறுதிசெய்து, அவற்றுக்கான மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கை, செப்., முதல் வாரத்தில் நடத்த, திட்டமிட்டுள்ள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us