UPDATED : ஆக 30, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: மரக்காணம் அடுத்த கந்தாடு கிராமத்தில் அமைய உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்திற்கான இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
திண்டிவனம்-மரக்காணம் சாலையில் உள்ள கந்தாடு கிராமம் அருகே 100 ஏக்கர் பரப்பளவில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
அந்த இடத்தை சென்னை உயர்க்கல்வித்துறை செயலர் கணேசன் உத்தரவுப்படி, தமிழ்நாடு கவுன்சிலர் பார் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி உறுப்பினர் செயலர் வின்சென்ட் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
திண்டிவனம் தாசில்தார் கல்யாணம், துணை தாசில்தார் தலைமலை, வருவாய் ஆய்வாளர் அலெக்சாண்டர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

