தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட்., சிறப்பு கல்வி விண்ணப்பப் படிவம்

பி.எட்., சிறப்பு கல்வி விண்ணப்பப் படிவம்

பி.எட்., சிறப்பு கல்வி விண்ணப்பப் படிவம்


UPDATED : ஆக 17, 2011 12:00 AM

ADDED : ஆக 17, 2011 12:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2011 12:00 AM ADDED : ஆக 17, 2011 12:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பி.எட். சிறப்புக்கல்வி பட்டப்படிப்பை நடத்தி வருகிறது.

பொதுப்பள்ளிகள் அல்லது சிறப்பு பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வியில் ஆர்வமுள்ள எந்த ஒரு பட்டதாரியும் பி.எட். சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பை படித்துள்ள மாற்றுத்திறனாளிகளும் இப்படிப்பில் சேர்ந்து பயன் அடையலாம். பி.எட். சிறப்புக்கல்வி பட்டப்படிப்பு பயிலத்தேர்வு செய்யப்படும் 500 மாணவர்களும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள 9 கல்வி மையங்களில் படிப்பு மற்றும் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர்.

பி.எட். சிறப்பு படிப்பிற்கு மாணவர்கள் 9.10.2011 அன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் நடைபெறும் பொது நுழைவுத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக வளாகம் மற்றும் கல்வி மையங்களில் இன்று (புதன்கிழமை) 19-ந்தேதி வரை வழங்கப்படும்.

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியை அ.கல்யாணி பல்கலைக்கழக வளாகத்தில் பி.எட். சிறப்புக்கல்வி படிப்பிற்கான விண்ணப்ப படிவத்தை இன்று வெளியிடுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us