தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நியூசிலாந்தில் கல்வி கற்பதற்கான நேர்முக நிகழ்ச்சி

நியூசிலாந்தில் கல்வி கற்பதற்கான நேர்முக நிகழ்ச்சி

நியூசிலாந்தில் கல்வி கற்பதற்கான நேர்முக நிகழ்ச்சி


UPDATED : ஆக 31, 2011 12:00 AM

ADDED : ஆக 31, 2011 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2011 12:00 AM ADDED : ஆக 31, 2011 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் மாணவர்களுக்கு, கடந்த 20 வருடங்களாக ஆலோசனை வழங்கிவரும், குளோபல் ரீச்(Global Reach) எனும் அமைப்பு, தற்போது, மாணவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கவுள்ளது.

சென்னையிலுள்ள பார்க் ஷெரட்டன் ஹோட்டலில், வரும் செப்டம்பர் 5ம் தேதி, நியூசிலாந்து நாட்டின் 8 பல்கலைக்கழகங்கள் கலந்துகொள்ளும் நேர்முக நிகழ்ச்சியை குளோபல் ரீச் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியானது, மதியம் 1pm முதல் மாலை 7pm மணிவரை நடைபெறவுள்ளது.

பொறியியல், வியாபாரம்(Business), தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு, இயற்பியல், வேதியியல், உயிரியல், பயோ-டெக்னாலஜி போன்ற அறிவியல் சார் படிப்புகளும், வரலாறு, இலக்கியம், வணிகம்(Commerce) மற்றும் அக்கவுண்டிங் போன்ற கலை சார் படிப்புகளும், மல்டிமீடியா, அனிமேஷன், ஸ்கிரிப்ட் எழுதுதல், திரைப்படம், தொலைக்காட்சி இயக்கம் மற்றும் நடிப்பு தொடர்பான படிப்புகளும் அந்தப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன.

இந்த 8 பல்கலைகளும், டிப்ளமோ, இளநிலைப் பட்டங்கள், பட்ட டிப்ளமோ(Graduate Diplomas), முதுநிலைப் பட்ட டிப்ளமோ மற்றும் ஆராய்ச்சி பட்டங்கள் போன்றவைகளை வழங்குகின்றன.

இந்த நேர்முக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, மாணவர்கள், முன்கூட்டியே குளோபல் ரீச் அமைப்பில் பதிவுசெய்ய வேண்டும். இதன்மூலம், அவர்களுக்கு மின்னணு அழைப்புகள்(E-invites) வரும். இதில் கலந்துகொள்ள வரும் மாணவர்கள், தங்களுடைய பிளஸ்2 சான்றிதழ்களின் நகல்களை எடுத்துவர வேண்டும். தங்களது சான்றிதழ்களை ஏற்கனவே குளோபல் ரீச் அமைப்பில் சமர்ப்பித்தவர்கள், நேரடியாக நேர்முக நிகழ்வில் பங்கேற்கலாம்.

Chennai@globalreachonline.com என்ற மின்னஞ்சல் முகவரியில், இதற்கான முன்பதிவு செய்யலாம்.

இதுகுறித்து இன்னபிற தகவல்களை அறிந்துகொள்ள 9841014499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us