தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விஜயதசமி நாளில் பிள்ளைகள் பள்ளியில் சேர்ப்பு

விஜயதசமி நாளில் பிள்ளைகள் பள்ளியில் சேர்ப்பு

விஜயதசமி நாளில் பிள்ளைகள் பள்ளியில் சேர்ப்பு


UPDATED : அக் 07, 2011 12:00 AM

ADDED : அக் 07, 2011 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2011 12:00 AM ADDED : அக் 07, 2011 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயதசமியையொட்டி தமிழகம், கேரளா உட்பட இந்தியாவின் பல்வேறு பள்ளி மற்றும் கலைக் கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை காரணமாக, சில பெற்றோர் தங்களது குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம்.

அதுபோல, நேற்றைய தினம் பல பள்ளி மற்றும் கலைக் கூடங்கள் மாணவ சேர்க்கைக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி பல குழந்தைகள் பள்ளிகளிலும், நடனம், பாட்டு, வாத்தியக் கருவிகள் இசைக்கும் பயிற்சியிலும் சேர்க்கப்பட்டனர்.

கோயில்களில் அரிசி நெல்லைப் பரப்பி அதில் தன் குழந்தைக்கு முதன் முதலாக எழுதக் கற்றுக் கொடுத்த பல பெற்றோரைக் காண முடிந்தது.

சரஸ்வதி பூஜையன்று வீடுகளில் வைத்து வழிபட்ட புத்தகங்களை மாணவ, மாணவியர் மிகுந்த பக்தியோடு விஜயதசமியன்று எடுத்து ஆர்வத்துடன் படித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us