தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விரைவில் சென்னை பல்கலையில் கிரேடு முறை

விரைவில் சென்னை பல்கலையில் கிரேடு முறை

விரைவில் சென்னை பல்கலையில் கிரேடு முறை


UPDATED : அக் 12, 2011 12:00 AM

ADDED : அக் 12, 2011 01:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2011 12:00 AM ADDED : அக் 12, 2011 01:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் உள்ள கல்வி முறை நடைமுறை வாழ்க்கைக்கு உகந்தது அல்லாத நிலை உள்ளது. வெளிநாடுகளில் கல்வி முறை அவ்வாறு இல்லை. நடைமுறை செயல்பாட்டில் உள்ளபடியே கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது.

மனப்பாடம் அல்லாத நிலையில் கல்வி கொண்டு வர வேண்டும். புத்தகத்தை தாண்டிய அறிவு தேவை என்று கருதி, மத்திய கல்விவாரியம் முதன் முதலாக 10வது வகுப்பில் மதிப்பெண்ணிற்கு பதிலாக கிரேடு முறையை அறிமுகப்படுத்தியது. அதேப்போல, தமிழக அரசும், பள்ளிகளில் கிரேடு முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தை பெரும்பாலான கல்வியாளர்களும், பொதுமக்களும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் கூறுகையில், பள்ளியில் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை கொண்டு வந்த பிறகு கல்லூரிகளிலும் கிரேடு முறை கொண்டு வருவதுதான் சரியானது. எனவே சென்னை பல்கலைக்கழகததில் கிரேடு முறை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இது குறித்து முதலில் கல்விக்குழுவிடமும், சின்டிகேட்டிலும் இறுதியாக செனட் கூட்டத்திலும் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

இதனால் சென்னை பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற 171 கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை வகுப்புகளிலும் கிரேடு முறை கொண்டு வரப்படும். கிரேடு முறையால் பல நன்மைகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us