தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலை வாய்ப்புகளை தரும் ஜப்பானிய மொழி

வேலை வாய்ப்புகளை தரும் ஜப்பானிய மொழி

வேலை வாய்ப்புகளை தரும் ஜப்பானிய மொழி


UPDATED : அக் 13, 2011 12:00 AM

ADDED : அக் 13, 2011 02:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2011 12:00 AM ADDED : அக் 13, 2011 02:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொருளாதார தாராளமய உலகில், சர்வதேசங்களும் பொருளியல் நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து ஈடுபட்டுவரும் சூழலில், ஆங்கிலம் தவிர்த்து பல்வேறான மொழிகளை கற்கும் கலாச்சாரம் நம் சமூகத்தில் நுழைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ், சீனம் உள்ளிட்ட மொழிகளோடு, ஜப்பானிய மொழியும் பலரால் விரும்பி கற்கப்பட்டு வருகிறது. அந்நாட்டுடன் பொருளாதார ஒத்துழைப்புகள் அதிகமாக உள்ள இன்றைய நிலையில் அந்த மொழி கற்பது அதிகரித்து வருகிறது.

சென்னையில் S&N ஹயாகவா என்டர்பிரைசஸ் (பி) லிமிடெட் என்ற அமைப்பு, ஜப்பான் மொழியைக் கற்பித்தலில் முக்கிய இடம் வகிக்கிறது. கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரலில் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட இந்த அமைப்பு, எலக்ட்ரானிக் அண்ட் சாப்ட்வேர் எக்ஸ்போர்ட் ப்ரமோஷன் கவுன்சிலின்(ESC) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

சென்னை அண்ணாநகர் பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு ஹாயகவா(Hayakawa) ஜப்பானிய மொழிப் பள்ளி ஏற்படுத்தப்பட்டது. இந்த ஹாயகவா அமைப்பு இதுவரை சுமார் 10,000 மாணவர்களுக்கு ஜப்பானிய மொழியில் பயிற்சியளித்துள்ளது.

பலரும் ஜப்பானிய மொழியை விரும்பிக் கற்க பலவித காரணங்கள் உள்ளன. ஜப்பான் மொழி தெரிந்த மாணவர்கள், மாணவர் பரிமாற்ற ஒப்பந்தம் மூலமாக ஜப்பான் சென்றுவர வாய்ப்பு கிடைக்கிறது. சென்னையில் மட்டுமே மொத்தம் 240 ஜப்பானிய நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ள நிலையில், இதைத் தவிர்த்து, இந்தியாவின் பிற பகுதிகளில் இன்னும் 450 ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, ஜப்பான் மொழியைக் கற்கும் பட்சத்தில், இந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை எளிதில் பெறலாம் மற்றும் இதன்மூலம் ஜப்பான் நாட்டிற்கும் செல்லலாம். இந்த மையத்தில் ஜப்பான் மொழியைக் கற்ற பலர், மேற்கண்ட நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மையத்தில் JLPT, N5, N4 மற்றும் N3 போன்ற பலவித நிலைகளில் ஜப்பானிய மொழி கற்றுத்தரப்படுகிறது. வேலை வாய்ப்புகள் மட்டுமே என்றில்லாமல், பிற மொழிகளைக் கற்பதால், கலாச்சார இணைவு ஏற்படுகிறது. புதிய உலகப் புரிதல் உண்டாகிறது. மேலும், தமிழ் மொழிக்கும், ஜப்பானிய மொழிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன என்று சென்னையிலிருக்கும் ஜப்பானிய கவுன்சில் ஜெனரல் மசனோரி நக்கனோ தெரிவிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us