தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/லண்டனில் இந்தியக் கல்வி நிறுவனம் மூடல்

லண்டனில் இந்தியக் கல்வி நிறுவனம் மூடல்

லண்டனில் இந்தியக் கல்வி நிறுவனம் மூடல்


UPDATED : அக் 13, 2011 12:00 AM

ADDED : அக் 13, 2011 02:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2011 12:00 AM ADDED : அக் 13, 2011 02:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

TASMAC எனப்படும் Training and Advanced Studies in Management and Communications Ltd என்ற இந்திய கல்வி நிறுவனம் புனேவை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் புனே, பெங்களூர் மற்றும் கல்கத்தா போன்ற நகரங்களில் வளாகங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 2002ம் ஆண்டு லண்டனில் TASMAC -ன் முதல் வளாகம் திறக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனத்தின் இந்திய வளாகம் ஒன்றில் படிக்கும் மாணவர், விருப்ப முறையில் லண்டன் வளாகத்திலும் சென்று படிக்கும் வாய்ப்புகள் இருந்தன.

ஆனால், சமீபத்தில் பிரிட்டனில் மாணவர் விசா நடைமுறையில் சில கடுமையான விதிமுறைகள் சேர்க்கப்பட்டதையடுத்து, லண்டன் TASMAC வளாக மாணவர் சேர்க்கையில் கடும் சிக்கல் ஏற்பட்டு, தொடர்ந்து அந்த வளாகத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த வளாகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிரிட்டனில் இயங்கிவந்த ஒரே இந்திய கல்வி நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வளாகத்தில் சுமார் 200 இந்திய மாணவர்கள் வரை படித்து வந்தனர். இக்கல்வி நிறுவனத்தில் பி.ஏ. ஹானர்ஸ் மற்றும் MBA பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்த விவகாரத்தால், அதில் படித்துவந்த மாணவர்களின் நலன் பாதிக்கப்படாமல் தடுக்க, இந்திய ஹை கமிஷன், வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன்(இங்கிலாந்தின்) இணைந்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை வேறு கல்வி நிறுவனத்திற்கு மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், லண்டன் TASMAC வளாகத்தில் படித்துவந்த இந்திய மாணவர்கள், நாடு திரும்பி இந்தியாவிலிருக்கும் வளாகங்களில் தாராளமாக தங்களின் படிப்பைத் தொடரலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. லண்டன் வளாகம் மூடப்பட்டுவிட்டதால், இந்தியாவின் TASMAC வளாகங்களில் படிக்கும் மாணவர்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அக்கல்வி நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us