UPDATED : அக் 13, 2011 12:00 AM
ADDED : அக் 13, 2011 02:37 PM
மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் கல்வி மையத்தின் அகமதாபாத் மையத்தில் 4 ஆண்டு இளநிலை பட்டயப்படிபிற்கும், அகமதாபாத், காந்திநகர், பெங்களூரு கல்வி மையங்களில் இரண்டரை ஆண்டுகளைக் கொண்ட முதுநிலை பட்டயப் படிப்பிலும் மாணவ சேர்க்கை நடைபெறுகிறது.
கிராஜுவேட் டிப்ளமோ புரோகிராம் இன் டிசைன் (ஜிடிபிடி)
2011-12ம் கல்வியாண்டில் பிளஸ் 2 அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதிகபட்சமாக 20 வயதுக்குள் இருக்க வேண்டும். பின்தங்கிய இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. 4 ஆண்டுகளைக் கொண்ட இப்படிப்பில் 3 பாடப்பிரிவுகள் உள்ளன. பேகல்டி ஆப் இன்டஸ்ட்ரியல் டிசைன், பேகல்டி ஆப் கம்யூனிகேஷன் டிசைன், பேகல்டி ஆப் டெக்ஸ்டைல், அப்பேரல் அன்ட் லைப்ஸ்டைல் ஆக்சஸரி டிசைன் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஆப்டிடியூட் டெஸ்டில் பங்கேற்கும் மாணவர்களின் திறனை வைத்து சேர்க்கை நடைபெறும். மொத்தம் 100 சேர்க்கை இடங்கள் உள்ளன.
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ புரோகிராம் இன் டிசைன் (பிஜிடிபிடி)
4 ஆண்டு வடிவமைப்பு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது தகுதி 30. இதில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது. ஒருவர் இரண்டிற்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 245 சேர்க்கை இடங்கள் உள்ளன.
விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், ரூ.1500 செலுத்தி நேரடியாக வங்கிகளிலும் பெற்றுக் கொள்ளலாம். பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.750க்கு விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் நவம்பர் 21ம் தேதியாகும்.
இளநிலை படிப்பில் சேர 2012 ஜனவரி 7ம் தேதியும், முதுகலை பட்டயப்பப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு 2012 ஜனவரி 8ம் தேதியும் ஆப்டிடியூட் டெஸ்ட் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு www.nid.edu இணையதளத்தைப் பார்க்கவும்.
