தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு

சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு

சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு


UPDATED : அக் 29, 2011 12:00 AM

ADDED : அக் 29, 2011 05:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2011 12:00 AM ADDED : அக் 29, 2011 05:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்த தேர்வு நடைபெறும். ஆண்டிற்கு நான்கு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.

கல்வித்தகுதி
சிஏ சிபிடி தேர்வெழுத விரும்புவோர் கணக்குப்பதிவியல் பாடம் எடுத்து படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேரச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை
சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் 200 கேள்விகள் கேட்கப்படும். இரண்டு பிரிவுகளாக கேட்கப்படும் ஒவ்வொரு பகுதிக்கும் 2 மணி நேரங்கள் அளிக்கப்படும். பேப்பரில் மாணவர்கள் தேர்வெழுதும் விதத்திலும், ஆன்லைனில் தேர்வெழுதும் விதத்திலும் தேர்வுகள் அமையும்.

முதல் தாளில் அடிப்படை கணக்குப்பதிவியல் மற்றும மெர்க்கன்டை லா பாடப்பிரிவில் இருந்தும், இரண்டாம் தாளில் பொது பொருளாதாரம் மற்றும் குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட் பிரிவு கேள்விகளும் கேட்கப்படும். கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். தவறான பதில்களுக்கு எதிர்மறையான மதிப்பெண்கள் உண்டு.

நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் போது பதிவுக்கட்டணம் மற்றும் டியூஷன் கட்டணம் சேர்த்து ரூ.6000 செலுத்த வேண்டும். தேர்வு அறிவிப்பு வெளியானதும், தேர்வுக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். தேர்வுத் துறை தேர்வு மையங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடும். அனுமதிச் சீட்டுக்களும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் 4 முறை அதாவது பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் சிஏ சிபிடி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் மட்டுமே மேற்கொண்டு சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் படிக்க இயலும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us