தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குளிர்காலத்தில் பிறந்தால் டாப் பல்கலையில் அட்மிஷன்

குளிர்காலத்தில் பிறந்தால் டாப் பல்கலையில் அட்மிஷன்

குளிர்காலத்தில் பிறந்தால் டாப் பல்கலையில் அட்மிஷன்


UPDATED : நவ 02, 2011 12:00 AM

ADDED : நவ 02, 2011 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2011 12:00 AM ADDED : நவ 02, 2011 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வெயில் காலத்தில் பிறக்கும் குழந்தைகளை விட குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகப்பெரிய பல்கலைகளில் சேர்க்கை பெறுகின்றனர் என்று கூறுகிறது ஒரு ஆய்வு. பிஸ்கல் ஸ்டடிஸ் மையம் நடத்திய ஆய்வில், வெயில் காலத்தில் பிறக்கும் பிள்ளைகள் (ஏப்ரல், ஜுன், ஜுலை), குளிர் காலத்தில் பிறக்கும் (நவம்பர், டிசம்பர்) பிள்ளைகளும் ஒரே வகுப்பில் படிக்கும் போது, தங்களை விட வயதில் மூத்த சக தோழர்களுடன் வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகள் போட்டி போட முடியாமல் தவிக்கின்றனர். உதாரணத்திற்கு, ஜுன் மாதம் பிறக்கும் குழந்தை சரியான 3ம் வருடம் ஜுன் மாதத்தில் பள்ளியில் சேர்க்கப்படும். அதுபோல் நவம்பர் மாதத்தில் பிறக்கும் குழந்தை தனது மூன்றரை வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்படும். இதேப்போல, ஆகஸ்ட் மாதங்களில் பிறக்கும் பிள்ளைகள் அதிகளவில் தொழிற்கல்வியில் சேர்க்கை பெறுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. குழந்தைகளின் பிறந்த தேதியும், அவர்களது பழக்க வழக்கம், சுய உணர்ச்சி, சுய முன்னேற்றம், நடவடிக்கை, பள்ளியில் செயல்பாடு ஆகியவற்றில் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. ஆய்வின் முடிவில், ஒரு குழந்தை பிறக்கும் மாதத்தை வைத்து அவர்கள் எப்படி உருவாவார்கள், அவர்களது படிப்பு எவ்வாறு அமையும் என்பதை கூறலாம் என்று தெரிவிக்கிறது. குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் பள்ளியில் அதிக சந்தோஷமாக இருப்பதாகவும், வெயில் காலத்தில் பிறக்கும் குழந்தைகள் பள்ளியில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us