தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு பொதுத்தேர்வு சமச்சீர் கல்வி பாடதிட்டப்படி நடக்கும்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு சமச்சீர் கல்வி பாடதிட்டப்படி நடக்கும்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு சமச்சீர் கல்வி பாடதிட்டப்படி நடக்கும்


UPDATED : நவ 03, 2011 12:00 AM

ADDED : நவ 03, 2011 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2011 12:00 AM ADDED : நவ 03, 2011 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு (2011 - 2012) கல்வி ஆண்டு முதல், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை, சமச்சீர் பாடத்திட்டப்படி நடத்துவதென கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுவரை இருந்து வந்த இடைநிலைக்கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ - இந்தியன், ஓ.எஸ்.எஸ்.எல்.சி., ஆகிய பாடத்திட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வு என, ஒரே தேர்வு முறையாக அறிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில், 2012ம் ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்புக்கு நடக்கும், இடைநிலைக்கல்வி பொதுதேர்வு, சமச்சீர் கல்வி பாடத்திட்டப்படி நடக்கும். பழைய பாடத்திட்டப்படி தேர்வு நடக்காது. எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வர்கள் இனி சமச்சீர் கல்வி பாடத்திட்டப்படி தான் தேர்வு எழுதவேண்டும். இருப்பினும், 2011 செப்., மற்றும் அதற்கு முன், பழைய பாடத்திட்டத்தில், தேர்வெழுதி தோல்வியுற்ற மாணவர்கள் மட்டும், 2012 மார்ச்சில் நடக்கும் தேர்வை, பழைய பாடத்திட்டப்படி எழுத அனுமதிக்கப்படுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us