மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் பட்டியல்
மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் பட்டியல்
UPDATED : நவ 03, 2011 12:00 AM
ADDED : நவ 03, 2011 10:24 AM
தற்போது வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில், மாணவர்களின் புகைப்படம் இடம்பெறுவதில்லை. பெயர், பள்ளி, பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. இதனால், போலி மதிப்பெண் பட்டியல்கள் எளிதாக தயாரிக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்படுகின்றன. இந்த மதிப்பெண் சான்றிதழ்களைக் கொண்டு, பல மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேர்கின்றனர். போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பில் ஈடுபட்ட பலர், ஏற்கனவே வரிசையாக கைது செய்யப்பட்டனர். போலி மதிப்பெண் சான்றிதழ்களை தடுக்கும் வகையில், மாணவர்களின் புகைப்படங்களுடன் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. இந்த புதிய திட்டம், அடுத்த கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நடப்பு கல்வியாண்டிலேயே இத்திட்டத்தை அமல்படுத்த, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. வரும் மார்ச்சில் பிளஸ் 2 தேர்வெழுத உள்ள மாணவர்கள் குறித்த விவரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மாணவர்களின் புகைப்படங்களை சேகரிக்க, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
