தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனிமேஷன் பற்றிய விழிப்புணர்வு அவசியம்

அனிமேஷன் பற்றிய விழிப்புணர்வு அவசியம்

அனிமேஷன் பற்றிய விழிப்புணர்வு அவசியம்


UPDATED : நவ 03, 2011 12:00 AM

ADDED : நவ 03, 2011 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2011 12:00 AM ADDED : நவ 03, 2011 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : அனிமேஷன் படிப்பு குறித்து விழிப்புணர்வு மாணவர்களுக்கு அவசியம் என இ.எஸ்., கல்லூரி சேர்மன் செல்வமணி தெரிவித்தார்.

விழுப்புரம் இ.எஸ்., பான் ஏசியன் கலை மற்றும் அனிமேஷன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கல்லூரி சேர்மன் செல்வமணி தலைமை தாங்கி பேசியதாவது: மாணவர்களின் படிப்பு பட்டத்தை மட்டுமே வழங்கும்.

சிந்திக்கும் ஆற்றலுடன், திறனை வளர்த்து தனித்திறனோடு செயல்படுவது தான் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் முன்னேற இங்கு அனிமேஷன் கல்லூரியை துவக்கினோம்.

எனினும் இங்கு விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. 2டி, 3டி அனிமேஷன் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அனிமேஷன் துறை மாணவர்களுக்கு, அர்ப்பணிப்பும், கலையறிவு மற்றும் சிந்திக்கும் ஆற்றல் அவசியம்.

மும்பை பகுதியில் சாதாரணமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் அனிமேஷன் துறையில் படித்து 50 ஆயிரம் ரூபாய் மாத வருமானம் பெறுகின்றனர். அவர்களின் அறிவார்ந்த சிந்தனைகள் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிறது. வேலை தேடுவதை தவிர்த்து, விருப்பத்துடன் பயின்று திறனை வளர்த்துக் கொண்டு சுயமாக வேலையை ஏற்படுத்தி சாதிக்க வேண்டும். இவ்வாறு செல்வமணி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us