தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடைநிலைக் கல்வி திட்ட மேம்பாடு துவக்கம்

இடைநிலைக் கல்வி திட்ட மேம்பாடு துவக்கம்

இடைநிலைக் கல்வி திட்ட மேம்பாடு துவக்கம்


UPDATED : நவ 04, 2011 12:00 AM

ADDED : நவ 04, 2011 01:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2011 12:00 AM ADDED : நவ 04, 2011 01:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: தமிழகத்தில் பள்ளி வாரியாக, இடைநிலை கல்வி திட்ட விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து, ஆன்-லைனில் பதிவு செய்வதற்கு, கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட உள்ளது.

தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்வி திட்டம், நிதியின்மையால் கடந்த ஓராண்டாக பெயரளவில் செயல்பட்டு வந்தது. தற்போது மீண்டும் இடைநிலை கல்வி திட்டத்திற்கு புத்துயிர் தரப்பட உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் படிவங்கள் வழங்கப்பட உள்ளன.

இதில் பள்ளியின் தரம், கட்டட நிலை, மாணவர்களின் எண்ணிக்கை, கழிப்பறை வசதி, ஜாதி வாரியாக மாணவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து தேர்ச்சி பெறாமல் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்களின் கல்வி தகுதி, சிறப்பு பயிற்சித் தகுதி, விளையாட்டு வசதிகள், வகுப்பறை வசதி உட்பட பல நிலைக் குறித்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த படிவத்தை ஆன்-லைனில் பதிவு செய்து, தனி வெப்சைட் உருவாக்க உள்ளனர். இதன்மூலம் "பள்ளிகளின் தரம் மேம்படும்&' என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us