தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலையில் காலியாக இருக்கும் பணியிடங்கள்

சென்னை பல்கலையில் காலியாக இருக்கும் பணியிடங்கள்

சென்னை பல்கலையில் காலியாக இருக்கும் பணியிடங்கள்


UPDATED : நவ 07, 2011 12:00 AM

ADDED : நவ 07, 2011 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2011 12:00 AM ADDED : நவ 07, 2011 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழமையும் பாரம்பரியமும் மிக்க சென்னை பல்கலைக்கழகம், இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும், பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி வருகிறது.

மதிப்பும் பெருமையும் கொண்ட இப்பல்கலைக்கழகத்தில், 120க்கும் மேற்பட்ட காலி இடங்கள், கடந்த பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன. ஒரு பல்கலைக்கழகத்தின் அச்சாணி போன்றவர் பதிவாளர். ஆனால், கடந்த பல மாதங்களாக பதிவாளர் பதவி நிரப்பப்படாமல், பொறுப்பு அதிகாரியே பணிகளை கவனித்து வருகிறார்.

இதுபோல், பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனர் பதவி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி இயக்குனர் பதவி ஆகிய இரு முக்கிய பதவிகளும் நிரப்பப்படாமல் பொறுப்பாளர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. இதுபோல், 14 துறைகளுக்கு, துறை தலைமை பதவி காலியாக உள்ளது. பல்வேறு துறைகளில், 70க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில், நிதி அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது. பல உயர் பதவிகளில் பொறுப்பு அதிகாரிகள் மட்டுமே இருப்பதால், முக்கிய முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் கூறும்போது, "காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி கேட்டு, மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்" என்றார்.

செனட் உறுப்பினர் சம்பத்குமார் கூறும்போது, "பல்கலைக்கழகம் சுய அதிகாரம் கொண்ட அமைப்பு என்று சொன்னாலும், நடைமுறையில் மாநில அரசின் கருணை இல்லாமல் எதுவும் செய்ய முடியது. பல்கலைக் கழகத்துக்கு மாநில அரசுதான் நிதி ஒதுக்குகிறது. சில பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற பதவிகளும் விரைவில் நிரப்பப்படும் என நம்புகிறேன்" என்றார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறும்போது, "முதல் கட்டமாக அரசு கல்லூரிகளில், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் அனுமதி வழங்கி உள்ளார். பல்கலைக் கழகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us