தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைகள் நல ஆலோசகராக வேண்டுமா

குழந்தைகள் நல ஆலோசகராக வேண்டுமா

குழந்தைகள் நல ஆலோசகராக வேண்டுமா


UPDATED : நவ 07, 2011 12:00 AM

ADDED : நவ 07, 2011 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2011 12:00 AM ADDED : நவ 07, 2011 11:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மனஅழுத்தம், சோர்வு, படிப்பதில் உள்ள குறைபாடுகள், குடும்ப பிரசனைகள் மற்றும் படிப்பின் மீதான பயம் போன்ற காரணங்களால் பல குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை தேவைப்படுகிறது. ஆலோசனை என்பது அறிவுரையாக இருக்கக் கூடாது. நல்லது எது? கெட்டது எது? என்பதை மட்டும் எடுத்துரைப்ப தாகவும் இருக்கக் கூடாது.

குழந்தைகளின் நடவடிக்கை:
களில் என்ன மாற்றம் தேவையோ, அதை மட்டும் எடுத்துக் கூறுவதாக, இருக்க வேண்டும். மனநல ஆலோசகர்களால் குழந்தைகள், பிற்காலத்தில் நல்ல குடிமக்களாக உருவாக முடியும். குழந்தைகள் நல ஆலோசகர் பணியில் ஆர்வமுள்ளவர்கள், உளவியல் படிப்புகளை முடித்து மனநல ஆலோசகர் ஆகலாம்.

தகுதிகள்: 
பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை படித்தவர்கள், உளவியல் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். உளவியலில் பட்ட மேற்படிப்பு, எம்.பில்., பிஎச்.டி., போன்ற படிப்புகளை பயின்று மனநல ஆலோசகர் ஆக முடியும்.

குழந்தைகள் நல ஆலோசகர்கள் பணியில் ஈடுபட ஆர்வமும், சில தகுதிகளும் தேவை. நல்ல தகவல் தொடர்புத் திறனும், கவனிக்கும்திறனும் முக்கியத் தேவை. குழந்தைகளின் உள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறனும் வேண்டும். குழந்தைகளுடன் நன்கு பழகி, அவர்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டியதும் அவசியம்.

குழந்தைகளின் போக்கை நன்கு தெரிந்து கொண்டு அவர்களிடம் ஒன்றி பழகி, அவர்களின் குறைகளை அவர்களிடமே கேட்டறியும் திறனும் தேவை. மெல்லிய மனது இருக்க வேண்டும், அதே சமயத்தில் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடாது. ஒழுக்க நெறி சார்ந்த ஆழ்ந்த அறிவும், குழந்தைகள் மன நல ஆலோசகர்களுக்கு இன்றியமையாத ஒன்று. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் உளவியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வேலைவாய்ப்புகள்:
குழந்தைகள் நல ஆலோசகர்களுக்கு சிறப்பான பணி வாய்ப்புகள் காணப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில், நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பு உள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளிலும், பணிவாய்ப்புகள் காணப்படுகின்றன. மனநல ஆலோசகர்கள் தனியாக கிளினிக் வைத்து நடத்துவதன் மூலம் சிறப்பான வருமானத்தை பெற முடியும்.

இவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளது. பள்ளிகளிலும், குழந்தைகள் நல ஆலோசகர் தேவை அதிகரித்துள்ளது. ஆரம்ப கால ஊதியம் 17 ஆயிரம் ரூபாய் முதல் வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us