தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வினியோகம்

இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வினியோகம்

இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வினியோகம்


UPDATED : நவ 15, 2011 12:00 AM

ADDED : நவ 15, 2011 09:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2011 12:00 AM ADDED : நவ 15, 2011 09:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கான விண்ணப்பங்கள் வினியோகம், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நேற்று துவங்கின. விண்ணப்பம், முற்றிலும் இலவசம்.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு, இன வாரியாக, கட்-ஆப் தேதி விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தேதி வரையறைக்குள் வருபவர்கள் மட்டும், விண்ணப்பம் செய்யலாம். கட்-ஆப் தேதி விவரங்கள் அடங்கிய பட்டியல்கள், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

சென்னையில், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தொடக்கக் கல்வி அலுவலகத்தில், திங்களன்று ஏராளமானோர் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களிலேயே ஒப்படைக்க வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 23ம் தேதி மாலை 5.45 வரை, விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us