தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியருக்கு பட்நகர் விருது!

சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியருக்கு பட்நகர் விருது!

சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியருக்கு பட்நகர் விருது!


UPDATED : செப் 28, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

45 வயதுக்கு உட்பட்ட அறிவியல் விஞ்ஞானிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.


ரவீந்தர் கோஸ்வாமி (எய்மஸ், டெல்லி), ஜெய்குமார் ராதாகிருஷ்ணன் (டி.ஐ.எஃப்.ஆர்., மும்பை), ரஞ்சன் குமார் மாலிக் (ஐ.ஐ.டி., டெல்லி), பி.என். வினயசந்திரன் (ஐ.ஐ.எஸ்சி., பெங்களூர்), ஜி.பி.எஸ். ராகவா (இன்ஸ்டிட்யூட் ஆ மைக்ரோபயல் டெக்னாலஜி, சண்டீகர்), எல்.எஸ். சசிதரா சென்டர் பார் செல்லுலார் அண்ட் மாலிக்கியூலர் பயாலஜி, ஐதராபாத்), கருநாதன் ஸ்ரீஆனந்த் (இன்டர் யுனிவர்சிட்டி சென்டர் பார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ரோ பிசிக்ஸ், புனே), ஜருகு நரசிம்மமூர்த்தி (ஐ.ஐ.டி., கான்பூர்), ஸ்ரீகாந்த் சாஸ்திரி (ஜவகர்லால் நேரு சென்டர் பார் அட்வான்ஸ்ட் சயின்டிபிக் ரிசர்ச், பெங்களூர்) ஆகியோரும் இந்த விருது பெற தேர்வு பெற்றுள்ளனர்.


பட்நகர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்களை சி.எஸ்.ஐ.ஆர். டைரக்டர் ஜெனரல் சமீர்பிரம்மச்சாரி அறிவித்துள்ளார்.


டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விருதுகளை வழங்குகிறார்.


நானோ டெக்னாலஜி துறையில் மேற்கொண்டு வரும் ஆய்வுகளுக்காக பேராசிரியர் பிரதீப் இந்த விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


சென்னை ஐ.ஐ.டி.,யில் வேதியல் துறையில் நேனோ டெக்னாலஜி பேராசிரியராக இருக்கும் அவர், மாணவர்களிடம் அறிவியலை வளர்க்கும் வகையில ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கற்பிப்பிப்பதற்கான சாதனங்களை உருவாக்கியுள்ளார்.


கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்ற மாணவரான பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் கல்வி நிலையத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். அதையடுத்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் லாரன்ஸ் பெர்க்கிளி லேபரட்டரியில் முதுநிலை ஆய்வை மேற்கொண்டார். அதையடுத்து இந்தியானாவில் உள்ள பர்தியு பல்கலைக்கழகத்திலும் இருந்திருக்கிறார். 1993ம் ஆண்டிலிருந்து சென்னை ஐ.ஐ.டி.,யில் பணியாற்றி வருகிறார் பேராசிரியர் பிரதீப்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us