தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘வேலை வாய்ப்பு அதிகரித்தால் பயங்கரவாதம் குறையும்’

‘வேலை வாய்ப்பு அதிகரித்தால் பயங்கரவாதம் குறையும்’

‘வேலை வாய்ப்பு அதிகரித்தால் பயங்கரவாதம் குறையும்’


UPDATED : அக் 03, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


புதுடில்லி:
‘கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்தால், குற்றச் செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதும், பயங்கரவாதப் பாதையில் செல்வதும் குறையும்’ என, சுப்ரீம் கோர்ட் நீதிபதி அர்ஜித் பசாயத் கூறினார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்ட அமலாக்கம் தொடர்பான, தேசிய அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி டில்லியில் அக்., 2ம் தேதி துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அர்ஜித் பசாயத் கூறியதாவது:
வேலைவாய்ப்பு இல்லாததால், இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பயங்கரவாத இயக்கங்கள் உட்பட சமூக விரோத கும்பல்களால் ஈர்க்கப்படுகின்றனர். கிராமப்புறங்களில் வேலை கிடைப்பதை உறுதி செய்தால், குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும். அவர்கள் பயங்கரவாத பாதையில் செல்வதும் தடுக்கப்படும்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டம் மூலம், இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அப்படி செய்தால், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவ்வாறு அர்ஜித் பசாயத் கூறினார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
வறுமையை ஒழிக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம். இருந்தாலும், ஊழல், ஒளிவுமறைவு இல்லாத  செயல்பாடு  போன்ற காரணங்களால், திட்டத்தின் பலன்கள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கவில்லை. பாதியளவு மட்டுமே கிடைக்கிறது.
அதனால், இந்தத் திட்டத்தின் மூலம் என்ன பலன் கிடைக்கும், தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாநிலங்களில் உள்ள சட்ட உதவி மையங்களை இதற்கு பயன்படுத்த வேண்டும்.
ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு, ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் உறுதி செய்கிறது. இருப்பினும், சம்பள ஆவணங்களை பராமரிப்பதில் செய்யப்படும் முறைகேடு மற்றும் உள்ளூர் கான்ட்ராக்டர்களின் தில்லுமுல்லு வேலைகள் போன்றவற்றால், இந்தத் திட்டத்தின் பலன்கள் முழுமையாக மக்களுக்கு கிடைப்பதில்லை. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us