சிறந்த நாடாக இந்தியா பெயர் பெற வேண்டும்: அப்துல் கலாம் ஆசை
சிறந்த நாடாக இந்தியா பெயர் பெற வேண்டும்: அப்துல் கலாம் ஆசை
UPDATED : அக் 03, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலையில், ‘கவின்மிகு தஞ்சையின் மாசற்ற காற்றுத் திட்டத்தை’ முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைத்து பேசியதாவது:
சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் தகுதி வாய்ந்த எவருக்கும் கல்விக்கூடங்களில் அனுமதி மறுக்கக்கூடாது. மிகவும் தகுதி வாய்ந்த அறிஞர்கள், விஞ்ஞானிகள், முதலீடு செய்பவர்கள் நாடு திரும்ப வேண்டும்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும். தரமான, லஞ்ச லாவண்யமற்ற அரசு அமைய வேண்டும்.
வறுமை முழுவதும் ஒழிக்கப்பட்டு, பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தவிர்க்கப்பட்டு, இந்த சமூகத்தில் எவரும் ஒதுக்கப்பட்டவர்கள் இல்லை என நினைக்கும் நிலை வர வேண்டும்.
தீவிரவாத பயம் இல்லாமல், மகிழ்வான பாதையில் செல்லக்கூடிய நாள் வர வேண்டும். நம் நாடானது, உலகிலேயே வாழ்வதற்கு சிறந்த நாடாக இருக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
