தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயல்முறை விளக்க குறிப்பு வழங்காததால் பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு

செயல்முறை விளக்க குறிப்பு வழங்காததால் பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு

செயல்முறை விளக்க குறிப்பு வழங்காததால் பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு


UPDATED : அக் 03, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


காரைக்குடி:
காலண்டு தேர்வு முடிந்த நிலையிலும், பிளஸ் 2 அறிவியல் பாடங்களுக்கான செயல்முறை விளக்கக் கையேடு வழங்கப்படாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான செயல்முறை (பிராக்டிகல்) விளக்கக் குறிப்பு தனி கையேடாக வெளியிடப்படுகிறது. இவை முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தலா ரூ.9க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 10 செயல்முறைகள் உள்ளன. அரையாண்டு தேர்வுக்கு பிறகு திருப்புதல் தேர்வு துவங்கி விடும். இதனால் காலாண்டு தேர்வுக்குள் 5 செயல்முறைகளையும், அரையாண்டுக்குள் மீதியுள்ளவற்றையும் ஆசிரியர்கள் நடத்தி முடிக்க வேண்டும்.
இக்கல்வி ஆண்டில் காலாண்டு தேர்வுகள் முடிந்த நிலையிலும் விளக்கக் குறிப்பு கையேடு வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெறமுடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது கடந்த ஆண்டுக்குரிய விளக்கக் குறிப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். விளக்க கையேட்டை விரைவில் வழங்காவிட்டால் செயல்முறை தேர்வில் மாணவர்கள் குழப்பம் அடையும் அபாயம் உள்ளது என்கின்றனர் ஆசிரியர்கள்.
ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘கிராமப்புற, ஏழை மாணவர்கள் கல்வி பெற கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்தது. முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை ஒரு ரூபாய் கூட கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில், அறிவியல் பிரிவு மாணவர்களிடம் செயல்முறை விளக்க கையேட்டுக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு புத்தகத்தின் விலை ரூ.12 வரை விற்க கூடும் என எதிர்பார்க்கிறோம். காலாண்டு தேர்வுக்கு பின்னரும் செயல்முறை விளக்க குறிப்பு வழங்காததால் மாணவர்கள் சிரமம் அடைகின்றனர்’ என்றார்.
கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த கையேட்டுக்கு கட்டணம் வசூலிப்பது மாணவர், பெற்றோரிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விளக்க குறிப்புகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us