தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் தொழில்நுட்ப கண்காட்சி!

மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் தொழில்நுட்ப கண்காட்சி!

மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் தொழில்நுட்ப கண்காட்சி!


UPDATED : அக் 10, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

2009ம் ஆண்டிற்கான நிகழ்ச்சிகள் ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரையிலான நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. ’Kshitij 2009’ எனும் பெயரில் நடைபெறும் இந்த விழாவை கராக்பூர் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தின் அனைத்து துறை மாணவ, மாணவியரும் இணைந்து நடத்துகின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் உட்பட, 20 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், கியோட்டோ பல்கலைக்கழகம், ஸ்டான்போர்டு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., உட்பட 350 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.
துறை சார்ந்த வல்லூநர்கள், நிபுணர்கள் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்குகள், பயிலரங்குகள், விவாதங்கள் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. விழாவின் ஒருபகுதியாக நடந்த தொழில்நுட்ப கண்காட்சியில் நவீன தொழில்நுட்பங்கள், சர்வதேச அளவில் அவற்றின் பயன்பாடு, நிர்வகிக்கும் முறை ஆகியவை குறித்து மாணவர்கள் நிபுணத்துவம் பெறும் வகையில் விளக்கப்படுகிறது.
இதுதவிர, மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பொழுதுபோக்கு, ரோபாடிக், தொழில்சார்ந்த கருவிகள் என மாணவ, மாணவியரின் கைவண்ணத்தில் உருவான நவீன தொழில்நுட்ப கருவிகள் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை. மாணவ, மாணவியரின் ஆக்கப்பூர்வமான சிந்தனை, செயல்பாடு, தொழில்நுட்பத் திறன் ஆகியவை அவற்றில் பிரதிபலிக்கும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாகவும், அறிவு புகட்டுவதாகவும் கராக்பூர் ஐ.ஐ.டி.,யில் ஜனவரி 29ம் தேதி துவங்கும் இந்த விழாவில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் டிசம்பர் 14, 2008ற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு
வெப்சைட்: http://www.ktj.in
இ-மெயில்: contact@ktj.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us