தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பெங்களூரில் பல்கலைக்கழகம்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பெங்களூரில் பல்கலைக்கழகம்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பெங்களூரில் பல்கலைக்கழகம்


UPDATED : அக் 11, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் மாநாடு சிங்கப்பூரில் அக். 10ம் தேதி துவங்கியது.
இந்திய தொழில் சம்மேளனம் மற்றும் சிங்கப்பூர் - இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டின் துவக்க விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹூசைன் பேசியதாவது:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நிதி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னை மிகவும் சிக்கலானது மற்றும் மோசமானது. வளரும் நாடுகள் இந்தப் பிரச்னைகளை ஒரே நாள் இரவிலோ அல்லது சில மாதங்களிலோ தீர்த்து விட முடியாது.
வளரும் நாடுகளின் நுகர்வு மற்றும் முதலீட்டிலும் இந்த நிதி நெருக்கடி பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவும், சீனாவும் தங்களின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்த நாடுகள் வளர்ச்சி அடையும் போது, பல ஆசிய நாடுகள் பலன் அடையும்.
இந்தியா - சிங்கப்பூர் இடையேயான வர்த்தகம் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய முதலீட்டு நாடாக சிங்கப்பூர் இருந்தது. 3,500 இந்திய கம்பெனிகள் சிங்கப்பூரில் இருந்து செயல்படுகின்றன. இந்திய கம்பெனிகளின் முதலீட்டு வாய்ப்பாக சிங்கப்பூர் உள்ளது. இவ்வாறு லீ ஹூசைன் தெரிவித்தார்.
மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி பேசியதாவது:
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்திய மூலதன சந்தையிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவற்றில் இருந்து இந்தியாவும், சிங்கப்பூரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எந்த நாடும் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய பொருளாதார வளர்ச்சியை கொண்டிருக்க வேண்டியது அவசியம். இதுவே தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பெங்களூரில் பல்கலைக் கழகம் ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் அடுத்த மாநாடு, அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறும். இவ்வாறு வயலார் ரவி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us