தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவிகளை ஆடவைத்து கல்லூரிக்கு வளர்ச்சி நிதி: பெற்றோர் புகார்

மாணவிகளை ஆடவைத்து கல்லூரிக்கு வளர்ச்சி நிதி: பெற்றோர் புகார்

மாணவிகளை ஆடவைத்து கல்லூரிக்கு வளர்ச்சி நிதி: பெற்றோர் புகார்


UPDATED : அக் 11, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


ஆக்ரா:
மதுராவில் உள்ளது பிரேம் தேவி கல்லூரி. இந்த கல்லூரியின் நிர்வாகியாக இருப்பவர் கோவிந்த் பிரசாத் சவுத்ரி.
இவர் தன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளில், அழகாக இருப்பவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பாடுவதற்கும், ஆடுவதற்கும் பயிற்சி அளித்து, அவர்களை திருமணம் போன்ற விழாக்களில் பாடவும், ஆடவும் செய்துள்ளார். கல்லூரியின் முதல்வரும் இதற்கு உதவியுள்ளார். கல்லூரியின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக, இவ்வாறு செய்துள்ளார்.
கல்லூரி நிர்வாகியின் இந்தச் செயலால் எரிச்சல் அடைந்த மாணவிகளின் பெற்றோர், இது தொடர்பாக, மாநில முதல்வர் மாயாவதியிடம் புகார் தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் எம்.எல்.ஏ., ராஜ்குமார் ரவாத்தும், பெற்றோர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்.
இந்த விவகாரத்தை கவனித்து, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில இடைநிலைக் கல்வித் துறை அமைச்சர் ரங்கநாத் மிஸ்ராவையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருமண நிகழ்ச்சிகளில், மாணவிகளை பாட வைப்பது மற்றும் ஆடவைப்பதன் மூலம் ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் நிதி திரட்ட வேண்டும். இந்த திட்டத்தை அமல்படுத்த விரும்பாத பெண் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் நிர்வாகி பிரசாத் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களின் இந்தப் புகார் குறித்து, கல்லூரி நிர்வாகி கோவிந்த் பிரசாத் சவுத்ரியிடம் விசாரித்தபோது அவர் கூறியதாவது:
இது என்னை தவறான வழக்குகளில் சிக்க வைக்கவும், என் புகழை கெடுக்கவும் செய்த சதி. பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக மாணவிகளுக்கு பாடவும், ஆடவும் நாங்கள் கற்றுத் தருகிறோம்.
அவர்கள் தங்களின் ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளை வெளியே நடத்தும் போது, சிலர் பரிசுகளையும், வெகுமதிகளையும் வழங்குகின்றனர். இதில், தவறு எதுவும் இல்லை. அப்படி பரிசாக வழங்கப்படும் பணம் கல்லூரியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுவதில்லை.
மாணவிகளின் ஆட்டம் மற்றும் பாட்டு மூலம் ஒவ்வொரு ஆண்டும் 45 லட்சம் ரூபாய் திரட்டித்தர வேண்டும் என, கல்லூரி முதல்வருக்கு நான் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுவது போலியானது. என் லெட்டர் பேடு சமீபத்தில் திருடப்பட்டுள்ளது. அதை யாரோ முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு பிரசாத் சவுத்ரி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us