UPDATED : ஜன 28, 2013 12:00 AM
ADDED : ஜன 28, 2013 04:20 PM
உலகின் புகழ்பெற்ற பல்கலைகளில் ஒன்றாக சிங்கப்பூர் தேசிய பல்கலை, தான் வழங்கும் பல்வேறான இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு மாணவர்களை கேட்டுக் கொள்கிறது.
இந்திய தரநிலையில் 12ம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது இந்த 2013ம் ஆண்டில் 12ம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதவுள்ளவர்கள் மற்றும் அதற்கு இணையான சர்வதேச அளவிலான பள்ளிக் கல்வித் தகுதியை வைத்திருப்பவர்கள் www.nus.edu.sg/admissions/undergrad என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தாண்டு இறுதித் தேர்வு எழுதவுள்ள 12ம் வகுப்பு மாணவர்கள், சமீபத்தில் நடைபெற்ற தேர்வின் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
IB தகுதியுடையவர்கள், விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி பிப்ரவரி 21. இந்திய 12ம் வகுப்பு தகுதி உடையவர்களுக்கான கடைசித் தேதி மார்ச் 31. பிறவகை தகுதியுடையவர்களுக்கு பிப்ரவரி 28 கடைசித் தேதி.
அனைத்து வகையான விரிவான விபரங்களுக்கும் www.askadmissions.nus.edu.sg என்ற வலைத்தளம் செல்க.
