தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பணிவரன் முறை ஊதியத்திற்க்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

பணிவரன் முறை ஊதியத்திற்க்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

பணிவரன் முறை ஊதியத்திற்க்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்


UPDATED : ஜன 29, 2013 12:00 AM

ADDED : ஜன 29, 2013 07:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2013 12:00 AM ADDED : ஜன 29, 2013 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வித் துறையில், தொடக்க, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு, இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, டிகிரி சான்றிதழ், சம்பந்தப்பட்ட பல்கலைக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ், மாநில தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கும் அனுப்பப்படுகின்றன.

பல்கலை அளவில் அனுப்பப்படும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, உடனே அனுப்பப்படுகிறது. ஆனால், தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பப்படும் சான்றிதழ்கள், இழுத்தடித்து வழங்கப்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் பணி வரன்முறை செய்வதில், தாமத நிலை நீடிக்கிறது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் இன்றி அவதிப்படுகின்றனர். இவற்றை பெற விரும்பும் ஆசிரியர்கள், செலவு செய்து, சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, 10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்க்கும் அதிகாரத்தை, அந்தந்த மாவட்ட, சி.இ.ஓ.,க்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இல்லையேல், அந்தந்த மாவட்டங்களிலேயே, மாற்று ஏற்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us