மாணவர்களுக்குக் கல்விக்கடன்: தமிழகம் இரண்டாவது இடம்!
மாணவர்களுக்குக் கல்விக்கடன்: தமிழகம் இரண்டாவது இடம்!
UPDATED : நவ 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நாட்டில் உள்ள 27 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து நிதி அமைச்சகம் சேகரித்துள்ள புள்ளி விவரங்களிலிருந்து இத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை ரூ.901.47 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதக் கடனுதவியை
ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநில மாணவர்கள் பெற்றுள்ளனர். அதிலும் கணிசமானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலங்கள் மட்டும் 631 கோடி ரூபாய் கல்விக் கடன் பெற்றுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் கல்விக் கடன் அதிகம் பெறும் மாநிலங்களில் ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகியவை தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு ரூ.45.08 கோடி அளவுக்குத்தான் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
வங்கிக் கடன் அதிகமாக வழங்கியுள்ள வங்கிகளில் ஆந்திர வங்கி முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் அது ரூ.251.34 கோடி கல்விக் கடன் வழங்கியுள்ளது. அதையடுத்து கனரா வங்கி ரூ.171.80 கோடியும் பேங்க் ஆப் பரோடா ரூ.130.45 கோடியும் இந்தியன் வங்கி ரூ.53.88 கோடியும் கல்விக் கடன் வழங்கியுள்ளன.
வங்கிகள் வழங்கிய கல்விக் கடன் விவரம்:
2008-09 - ரூ.901.47 கோடி (செப்டம்பர் வரை)
2007-08 - ரூ.1,242.27 கோடி
2006-07 - ரூ.813.45 கோடி
2005-06 - ரூ..559.98 கோடி
