அமெரிக்காவைப் பற்றிய உங்கள் சந்தேகங்களும், விடைகளும்
அமெரிக்காவைப் பற்றிய உங்கள் சந்தேகங்களும், விடைகளும்
UPDATED : மார் 07, 2013 12:00 AM
ADDED : மார் 07, 2013 02:50 PM
அமைதியான வழியில் ஈரான் அணுசக்தியைப் பயன்படுத்தும் உரிமையை எதிர்க்கவில்லை என்பதை அமெரிக்கா பலமுறை கூறியிருக்கிறது. ஆனால் அந்த உரிமை பொறுப்புகளோடு கூடியது. முற்றிலும் அமைதி வழியிலான தனது அணுசக்தி நடவடிக்கைகள் மீது சர்வதேச சமூகம் கொண்டுள்ள ஐயத்தைப் போக்கி, நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்பு ஈரானுக்கு இருக்கிறது. சர்வதேசக் கடமைக்கு உடன்பட்டு, யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கையை ஈரான் நிறுத்தவில்லை. மேலும், சமீபத்தில் தனது உற்பத்தித் திறனை விரிவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வதேச சமூகத்தின் கவலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரான் உடனடியாக சர்வதேசக் கடமைகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களுக்கு ஏற்ப நடப்பதுடன், ராணுவப் பயன்பாட்டுக்கான சாத்தியம் உள்ளிட்ட தனது அணுசக்தி திட்டங்கள் குறித்த அனைத்துப் பிரச்சினைகளிலும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் ஒத்துழைக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதைத் தடுப்பதில் அமெரிக்கா உறுதியுடன் இருக்கிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் "தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்துக்கும்" அமைதியான வழிகளுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் பெருமளவு நிதியாதரவு அளிக்கும் நாடாக அமெரிக்கா இருந்து வந்திருக்கிறது; இப்போதும் இருக்கிறது. வாய்ஸ் ஆப் அமெரிக்கா வானொலி இப்போதும் ஒலிபரப்பாகிறதா? அப்படியெனில் எந்த அலைவரிசையில் கேட்கலாம்? VOA அல்லது வாய்ஸ் ஆப் அமெரிக்கா, அமெரிக்க பெடரல் அரசின் வெளிநாட்டு ஒலிபரப்பு நிறுவனம் ஆகும். வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகியவற்றில் ஒலிபரப்பத்தக்க பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை 43 மொழிகளில் வி.ஓ.ஏ., தயாரித்து அளிக்கிறது. இவை, உலகெங்கிலும் 123 மில்லியன் மக்களைச் சென்றடைகின்றன. தெற்காசியாவைப் பொருத்தவரையில், வி.ஓ.ஏ., ஆங்கில நிகழ்ச்சிகளின் பட்டியலை www.voanews.com/info/frequenciesandschedules/2218.html என்ற இணையத் தொடர்பில் காணலாம். சில நிகழ்ச்சிகளின் சுருக்கத்தையும் செய்தி அறிக்கையையும் வி.ஓ.ஏ. இணையதளத்தில் நேரடியாகக் காணலாம். கைபேசியில் பதிவிறக்கம் செய்யத்தக்க போட்காஸ்ட் தொகுப்புகளையும் வி.ஓ.ஏ., தருகிறது. சுற்றுலாவை ஊக்குவிக்க அமெரிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் சிறப்புத் திட்டங்கள் மற்றும் சலுகைகள் என்ன? நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) சுற்றுலா மூலம் வரும் வருமானத்தின் பங்கு என்ன? பயணம் மற்றும் சுற்றுலா, அமெரிக்காவின் மிகப் பெரிய சேவைத் துறை ஏற்றுமதியாகும். 2011-ம் ஆண்டில், கிட்டத்தட்ட 63 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார்கள். அதே 2011-ம் ஆண்டில், 6.6 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2016-ம் ஆண்டு வாக்கில் இரு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்கா வரும் சர்வதேசப் பயணிகள் போக்குவரத்தின் மதிப்பு 153 பில்லியன் டாலராகும். இதன் மூலம் அமெரிக்காவுக்கு கிடைக்கும் வெளிவர்த்தக உபரி 43 பில்லியன் டாலர். (
-சதயன் இனையதுல்லா, சென்னை
-தமிழ்ச் செல்வம், சென்னை
அமெரிக்காவுக்கு சர்வதேசப் பயணத்தையும் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் நோக்குடன் டிஸ்கவர் அமெரிக்கா (www.discoveramerica.com) என்ற இணையதளம் வாயிலாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. "சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் மற்றும் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் சிறப்புக் குழு" ஒன்று 2012 ஜனவரியில் உருவாக்கப்பட்டது. இது, மே 2012-ல், அமெரிக்காவிலுள்ள பல்வேறு வகையான சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிகளை ஈர்க்கும் வகையில், "தேசியப் பயண மற்றும் சுற்றுலா உத்தி"களை வகுத்தளித்தது.
இந்தியாவில், அமெரிக்க வர்த்தகத் துறையின், வர்த்தக சேவைப் பிரிவு, அமெரிக்காவுக்கு சர்வதேசப் பயணத்தை ஊக்குவிக்கும் தன்னார்வ அமைப்பான Visit USA Committee (VUSACOM) - யின் இந்தியப் பிரிவை நிறுவ உதவியுள்ளது. அமெரிக்காவிலுள்ள சுற்றுலாத் தலங்கள்/நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொள்ள விரும்பும் சுற்றுலா மற்றும் பயண நிறுவனங்கள், அமெரிக்க வர்த்தக சேவைப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம். சுற்றுலா முகவர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த மற்றவர்களிடம், சுற்றுலா விசாவுக்கு குழுவாக விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்களை எமது விசா அதிகாரிகள் நேரிலும் விளக்குகிறார்கள்.
அமெரிக்காவில் சிறந்த சுற்றுலாத் தலங்கள் பற்றி அறிய, காண்க: www.state.gov/misc/discoverusa/index.htm
உலகெங்கிலும் வேளாண் துறை நெருக்கடியிலிருக்கிறது. ஒரு முன்னேறிய நாடு என்ற வகையில், அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் இத்துறையைப் பாதுகாக்க, கூடுதல் தெளிவுடன் நடைமுறைச் சாத்தியமுள்ள திட்டங்கள் எதையேனும் அமெரிக்கா வகுத்திருக்கிறதா?
-பிரசன்னா, திருவண்ணாமலை
வேளாண் துறையைப் பாதுகாக்க அமெரிக்க அரசு வகுத்துள்ள உத்திகளில் சில: விதை, இடுபொருள்கள், உரம், இயந்திரங்கள் மற்றும் பாசன முறைகள் ஆகியவை விவசாயிகளை எளிதில் அடையும் வழிகளை அதிகரித்தல்; விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றிற்கு முதலீடு செய்ய ஏதுவாக சிறு விவசாயிகளுக்கு நிதி ஆதரவு கிடைப்பதை உறுதி செய்தல்; உயிர்ப்பன்மயத்தைப் பாதுகாத்தல், அரிய நீராதாரங்களைப் பராமரித்தல், மிகுதியான மண் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைளின் வாயிலாக உற்பத்தித்திறனில் சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், இயற்கை வள மேலாண்மையை மேம்படுத்துதல் ஆகியவை இந்த உத்திகளில் அடங்கும். வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரையில், "வேளாண் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு" ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
வேளாண் துறையில் பெண்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல், சர்வதேச அளவிலான புத்தாக்கம் மற்றும் ஆய்வில் முதலீடு செய்வது, வெளிப்படையான விலை நிர்ணயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வேளாண் துறை வளர்ச்சிக்கான நீண்ட காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சில முக்கிய முதலீடுகளைச் செய்தாக வேண்டும். பருவநிலை மாற்றங்களுக்கு உகந்தவாறு வேளாண் பொருட்களை விளைவித்தல், பூச்சிகள் மற்றும் எண்ணற்ற சூழல் தாக்குதல்களுக்குத் தாக்குப்பிடிக்கும் புதிய பயிர் வகைகளை உருவாக்குதல், மாறும் நிலப்பரப்புகள், நோய்த் தொற்றுகள் மற்றும் சூழல் நிலவரங்களுக்கு ஏற்ப கால்நடை மற்றும் மீன்வளர்ப்பு முறைகளை மாற்றியமைத்தல் ஆகியவை அத்தகைய மூதலீட்டுத் திட்டங்களில் அடங்கும்.
பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஆணாதிக்கம் ஆகிய பிரச்சினைகளை அமெரிக்கா எவ்வாறு பார்க்கிறது? அணுகுகிறது?
-பாலா, மதுரை
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சார்ந்த வழக்குகளைக் கையாள, அமெரிக்க சட்டம் மற்றும் நீதித் துறைகள் சிறப்புப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் வகையில், காவல் துறையினரும் வழக்கறிஞர்களும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். டி.என்.ஏ., போன்ற மரபணு சாட்சி உள்ளிட்ட ஆதாரங்களைச் சமர்ப்பித்து வழக்கை வலுவானதாக மாற்றுவதுதான் இதன் நோக்கம். காவல் துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஆதாரங்கள் திரட்டப்பட்டவுடன், பதிவு செய்ய வேண்டிய வழக்கா அல்லது எத்தகைய கிரிமினல் வழக்கு பதிவு செய்வது என்பதை விசாரணை அதிகாரி தீர்மானிக்கிறார். வலுவான நீதித் துறையே, குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்கிறது.
----
கேளுங்கள் அமெரிக்காவை...
‘தினமலர்’ வாசகர்களின் அமெரிக்கா குறித்த அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும், அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை பதில் அளிக்கிறது. இந்த பிரத்யேக பகுதிக்கு உங்களது கேள்விகள் மற்றும் கருத்துக்களை உடனே அனுப்புங்கள்.
தினமலர்
‘கேளுங்கள் அமெரிக்காவை...’
39, ஒயிட்ஸ் ரோடு,
சென்னை - 600 014.
இ-மெயில்:
