தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராஜபக்சேவை கண்டித்து மதுரையில் மாணவர்கள் போராட்டம்

ராஜபக்சேவை கண்டித்து மதுரையில் மாணவர்கள் போராட்டம்

ராஜபக்சேவை கண்டித்து மதுரையில் மாணவர்கள் போராட்டம்


UPDATED : மார் 12, 2013 12:00 AM

ADDED : மார் 12, 2013 08:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2013 12:00 AM ADDED : மார் 12, 2013 08:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் ஸ்டேட் வங்கியை உள்பக்கமாக பூட்டி கொண்டு, சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து, சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மதுரை சட்டக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர் கீரண் தலைமையில், கல்லூரி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின், கல்லூரி அருகில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்திற்கு மாணவர்கள் சென்றனர். அங்குள்ள ஸ்டேட் வங்கிக்குள், பகல் 12 மணிக்கு புகுந்தனர். உட்பக்கமாக பூட்டி கொண்டு கோஷம் எழுப்பினர். போலீசாருடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின், மதியம் 1 மணிக்கு வங்கியை விட்டு வெளியேறினர். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us