தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வகுப்பறையில் விலையில்லா பொருட்கள்: மாணவர்கள் அவதி

வகுப்பறையில் விலையில்லா பொருட்கள்: மாணவர்கள் அவதி

வகுப்பறையில் விலையில்லா பொருட்கள்: மாணவர்கள் அவதி


UPDATED : மார் 13, 2013 12:00 AM

ADDED : மார் 13, 2013 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2013 12:00 AM ADDED : மார் 13, 2013 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்: ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு வழங்க விலையில்லா பொருட்கள் மஞ்சுதளா பள்ளியில் வைக்கப்பட்டுள்ளதால், ஒரே வகுப்பில் அனைத்து மாணவர்களும் அமர்ந்த பாடம் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி., காலனி மற்றும் கோபாலபுரத்தில் 529 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு வழங்க வேண்டிய அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்காந்த அடுப்புகள் மஞ்சுதளா பள்ளியில் கடந்த வாரம் வைக்கப்பட்டது. அரசின் விலையில்லா பொருட்கள் பள்ளியின் வகுப்பறைகளில் வைக்கப்பட்டுள்ளன. சிலருக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்ட நிலையில், பொருட்கள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது ஒரு வார காலமாக பொருட்கள் வகுப்பறைகளிலேயே வைக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளன. வகுப்பறைகளில் அரசின் விலையில்லா பொருட்கள் இருப்பதால், மாணவர்கள் அந்த வகுப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அறையில் பாடம் நடத்த வேண்டிய நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. "மாணவர்களின் நலன் கருதி இந்த பொருட்களை உடனடியாக மக்களுக்கு வினியோகிக்க வேண்டும் அல்லது பொருட்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் &' என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us