தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவக் கல்லூரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்


UPDATED : மார் 19, 2013 12:00 AM

ADDED : மார் 19, 2013 01:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2013 12:00 AM ADDED : மார் 19, 2013 01:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி, அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழக கல்லூரி மாணவர்கள் மத்தியில் இலங்கை தமிழர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐ.நா.,வில் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திருச்சியிலும் சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி, இன்ஜினியரிங் மற்றும் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை தமிழர் பிரச்னைக்காக, நேற்று காலை முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரிக்கு சென்ற, திருச்சி கி.ஆ.பெ., விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகள், நேற்று மாலை 5 மணிக்கு, திடீரென கல்லூரி வாசல் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அப்போது தனி ஈழம் வேண்டும், ஐ.நா.,வில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us