தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : மார் 19, 2013 12:00 AM

ADDED : மார் 19, 2013 01:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2013 12:00 AM ADDED : மார் 19, 2013 01:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் சேர விரும்புபவர்கள் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆட்சியர் ராஜேஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: டேராடூனில் உள்ள ராஸ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில், 2014 ஜனவரி துவங்கும் வகுப்புகளில் சேர்க்கைக்கான தகுதி தேர்வு ஜூன் மாதம் முதல் மற்றும், இரண்டாம் தேதிகளில் நடக்கிறது. ஏழாம் வகுப்பு தேறிய அல்லது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும், 2001 ஜனவரி, 2ம் தேதிக்கும், 2002 ஜூலை, 1ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கான விண்ணப்ப படிவம் விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம். கட்டணத்தை "தி கமாண்டன்ட், ஆர்.ஐ.எம்.சி., டேராடூன்" என்ற பெயிரில் டேராடூனில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக "தி கமாண்டன்ட், ராஸ்டிரிய இன்டியன் மிலிட்டரி காலேஜ், டேராடூன் கண்டோன்மென்ட், டேராடூன்-248 003, உத்தராகண்ட் மாநிலம்" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த கல்வி நிறுவனத்தில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினர்கள் விரைவு தபாலில் பெற 450 ரூபாயும், பதிவுத்தபாலில் பெற 400 ரூபாயும், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் விரைவு தபாலில் பெற, 405 ரூபாயும், பதிவுத்தபாலில் பெற 355 ரூபாயும் சாதி சான்றுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

டேராடூனில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து "கண்ட்ரோலர் ஆப் எக்சாமினேசன், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், வி.ஓ.சி., நகர், சென்னை-600 003" என்ற முகவரிக்கு வரும், 31ம் தேதிக்குள் சேரத்தக்க வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

எழுத்து தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத வேண்டும். எழுத்து தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு அக்டோபர் 7ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

இது குறித்து மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us