UPDATED : மார் 23, 2013 12:00 AM
ADDED : மார் 23, 2013 10:21 AM
கரூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், ஹாக்கி லீக் போட்டிகள் வரும் 26 ம் தேதி, கவுண்டம்பாளையம் டாக்டர் எம்.ஏ.எம்.ஆர்.சி., அரசு உயர்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
போட்டியில் ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம். வயது வரம்பு கிடையாது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள் மண்டல போட்டிகளில் வெற்றிபெற தகுதியுடையவர் ஆவர். போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அணியினர், மேலாளருடன் செல்ல வேண்டும்.
போட்டியில், "கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களில் பயிலும், பணிபுரியும் வீரர்கள் பங்கேற்றலாம்" என, கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
