தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீச்சல் பயிற்சி பெற விதிமுறைகள் அமல்

நீச்சல் பயிற்சி பெற விதிமுறைகள் அமல்

நீச்சல் பயிற்சி பெற விதிமுறைகள் அமல்


UPDATED : ஏப் 04, 2013 12:00 AM

ADDED : ஏப் 04, 2013 02:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 04, 2013 12:00 AM ADDED : ஏப் 04, 2013 02:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், காந்தி மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில், நேற்று கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கியது.

சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளம், கடந்தாண்டு, ஆறு லட்சம் ரூபாய் செலவில் பராமரிக்கப்பட்டது. இந்த நீச்சல் குளத்தில் கோடைகால பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.

சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் கூறியதாவது:
நீச்சல் குளத்தில் பயிற்சி எடுக்க வருவோர், கட்டாயம் கையெழுத்து போட்டு விட்டுதான் பயிற்சிக்கு வர வேண்டும். இங்குள்ள ஷவரில் குளித்த பிறகே, நீந்துவதற்கு அனுமதிக்கப்படுவர். பனியன், பேண்ட், லுங்கி அணிந்து வந்தால், நீச்சல் பயிற்சிக்கு அனுமதிக்க மாட்டோம். மது அருந்தி விட்டு வருவோருக்கும், நீச்சல் பயிற்சிக்கு அனுமதியில்லை. பயிற்சிக்கு வரும் போது, சிலர் செல்ல பிராணிகளுடன் வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நீச்சல் பயிற்சிக்கு வருவோர், நீச்சல் குளத்தை சுற்றி ஓடுதல், குதித்தல், பாய்தல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நீச்சலடிக்கும் போது, அறியாமையால் ஏற்படும் விபத்து, காயம் மற்றும் உயிரிழப்புகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பொறுப்பேற்காது.

தினமும் ஒரு மணி நேரம் வீதம், 15 நாள் பயிற்சிக்கு, 600 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us