தேர்வு எழுதும் மாநகராட்சி மாணவர்களுக்கு கவுன்சிலிங்!
தேர்வு எழுதும் மாநகராட்சி மாணவர்களுக்கு கவுன்சிலிங்!
UPDATED : நவ 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மூலம் நடத்தப்படும் இந்த மாணவர் ஆலோசனை நிகழ்ச்சி நவம்பர் 11ம் தேதி தொடங்கும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மாநகராட்சி பள்ளிகளில் இரண்டு பேர் அமரக்கூடிய டெஸ்க் வசதிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ரூ.6.59 கோடி செலவில் 13,500 டெஸ்க்குகள் வாங்கப்பட்டுள்ளன என்றார். 109 மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்கும் 65 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இந்த டெஸ்க்குகள் வழங்கப்படும் என்றார்.
மாநகராட்சிப் பள்ளிகளில் இசையும் நடனமும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். இத்திட்டம் நவம்பர் 13ம் தேதி தொடங்கப்படுகிறது. ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தும் திட்டம் நவம்பர் 18ம் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதத்திலிருந்து மாநகராட்சிபள்ளிகளில் மாலையில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு புரூட் பிரட் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
