தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மேலும் 5 நிமிடம் அவகாசம்

பள்ளி பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மேலும் 5 நிமிடம் அவகாசம்

பள்ளி பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மேலும் 5 நிமிடம் அவகாசம்


UPDATED : நவ 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வினாத்தாளை படித்துப் பார்ப்பதற்கென்று ஏற்கனவே 10 நிமிடங்கள் ஒதுக்கியுள்ள நிலையில், தற்போது பதிவெண் உள்ளிட்ட விவரங்களை விடைத்தாளில் பூர்த்தி செய்வதற்காக கூடுதலாக ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ‘இந்த புதிய முறை, வரும் பொதுத்தேர்வு முதல் அமலுக்கு வரும்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒன்பது லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை ஆறு லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர். தேர்வு ஒன்றை மட்டுமே நினைத்து படிக்கும் மாணவர்கள், தேர்வின் போது செய்ய வேண்டிய சில முக்கியமான வேலைகளில், பதட்டத்தின் காரணமாக தவறு செய்து விடுகின்றனர்.
பதிவு எண்களை தவறாக எழுதுவதில் துவங்கி, வினாக்களை முழுமையாக படித்து, அதற்கான விடைகளை சரியாக யூகித்து முடிவு செய்யாமல் தவறான விடைகளை எழுதுவது வரை பல்வேறு தவறுகளை செய்து விடுகின்றனர். விடைத்தாளை திருத்தும் போது, இது போன்ற தவறுகளை தேர்வுத்துறை கண்டுபிடிக்கிறது. இந்த முக்கிய தவறுகளால் மாணவர்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்தப் பிரச்னைகளை மையப்படுத்தி, வினாத்தாளை படிக்க கூடுதலாக 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்த அரசு, கடந்த பொதுத்தேர்வுக்கு முன்னதாக வினாத்தாளை படிப்பதற்கு என்றே கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கி உத்தரவிட்டது. இந்த திட்டம், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆனாலும், ‘கேள்வித்தாளை படிப்பதற்கே 10 நிமிடங்கள் போய் விடுகிறது. விடைத்தாள் கொடுத்ததும் அதில் பதிவெண், அன்றை தேர்வுப் பாடம் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய கூடுதல் நேரம் செலவாகிறது. அதற்கென ஐந்து நிமிடம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்திலும் இந்த கருத்து குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், விடைத்தாளில் பதிவெண் உள்ளிட்ட விவரங்களை எழுதுவதற்காக மேலும் ஐந்து நிமிடங்களை ஒதுக்கீடு செய்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இந்த கூடுதல் நேர ஒதுக்கீடு முறை, வரும் பொதுத்தேர்வில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், இது குறித்து மேலும் கூறியதாவது:
புதிய மாற்றங்களின் அடிப்படையில் இனி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, காலை 10 மணிக்கு துவங்கி 12.45க்கு முடிவடையும். 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். 10.10க்கு விடைத்தாள் வழங்கப்படும். அதில், பதிவெண் உள்ளிட்ட விவரங்களை மாணவர்கள் பூர்த்தி செய்த பின், 10.15க்கு தேர்வு துவங்கும். தேர்வுக்கென்று ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி இரண்டரை மணி நேரம் தேர்வு நடைபெறும்.
இதேபோல் பிளஸ் 2 தேர்வுகளும் நடைபெறும். விடை எழுதுவதற்கான நேரம், 10.15 மணிக்கு துவங்கி 1.15க்கு முடிவடையும். செய்முறைத் தேர்விலோ அல்லது எழுத்துத் தேர்விலோ எந்தவித மாற்றங்களும் கிடையாது. ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி அனைத்துத் தேர்வுகளும் நடைபெறும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தாமதமாக வந்தால் சலுகை கிடையாது:
தேர்வு அறையில் சரியாக 10 மணிக்கு உள்ளே இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே, மேற்கண்ட 15 நிமிட சலுகைகள் பொருந்தும். 10.15 மணிக்கு வந்தால், இந்த சலுகை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த காலங்களில் தேர்வு நேரத்திற்கு வராமல் ஐந்து நிமிடங்கள், 10 நிமிடங்கள் தாமதமாக வந்தால் அன்றைய தேர்வை எழுதாமல் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
தற்போதைய சலுகையின் காரணமாக 15 நிமிடங்கள் வரை தாமதமாக சென்றாலும் தேர்வு எழுத முடியும். எல்லா மாணவர்களும் சரியான நேரத்தில் தேர்வு அறைக்கு வந்து விடுகின்றனர் என்றாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சில நிமிடங்கள் மாணவர்கள் தாமதமாக வர நேரிட்டால் பாதிப்பு ஏற்படாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us