"உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் நடனமாவது ஆடுங்கள்"
"உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் நடனமாவது ஆடுங்கள்"
UPDATED : ஏப் 09, 2013 12:00 AM
ADDED : ஏப் 09, 2013 10:59 AM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: "உடற்பயிற்சி செய்யாவிட்டால், நடனமாவது ஆடுங்கள்," என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையில் விளையாட்டு விழா நடந்தது. பரிசுகளை வழங்கி மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வி இயக்குநர் சாத்தையா பேசியதாவது:
"உடல் நலன் மிக முக்கியம். உட்கார்ந்தபடியே நாம் படிக்கிறோம், வேலை பார்க்கிறோம். தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெண்களுக்கு மிக மிக அவசியம். உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ செய்யாவிட்டால், ரூமிற்குள் நடனமாவது ஆட வேண்டும்," என்றார்.
