தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரியில் கேரள மாணவர்கள் கடும் மோதல்

கல்லூரியில் கேரள மாணவர்கள் கடும் மோதல்

கல்லூரியில் கேரள மாணவர்கள் கடும் மோதல்


UPDATED : ஏப் 11, 2013 12:00 AM

ADDED : ஏப் 11, 2013 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2013 12:00 AM ADDED : ஏப் 11, 2013 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: பொறியியல் கல்லூரியில், கேரள மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கார், மோட்டசார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, மேலத்திடியூரில், பி.எஸ்.என்., இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இங்கு கேரள மாநில மாணவர்கள், அதிகமாக படிக்கின்றனர். நேற்றுமுன்தினம் இரவு, கல்லூரி விடுதியில் மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மூன்றாம் ஆண்டு மாணவர்கள், முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் மீது, உணவு பொருட்களை வீசி, தகராறில் ஈடுபட்டனர்.

இரும்பு கம்பிகளால் தாக்குதலில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் அறை, நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சேதப்படுத்தினர். இதில் கம்ப்யூட்டர்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள் சேதமுற்றன. அலுவலகத்திற்கு கீழாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்கள், மோட்டார் சைக்கிள்களும் அடித்து நொறுக்கப்பட்டன. கல்லூரி வார்டன் அருண், புகாரின்பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். வார்டன் அருண் புகாரின் பேரில் கேரள மாணவர்கள் வின் வாஷிங்டன், சுமித் உள்ளிட்ட, 32 பேர் மீது, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us