தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராகும் வாய்ப்பு

படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராகும் வாய்ப்பு

படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராகும் வாய்ப்பு


UPDATED : ஏப் 16, 2013 12:00 AM

ADDED : ஏப் 16, 2013 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 16, 2013 12:00 AM ADDED : ஏப் 16, 2013 11:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை: படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக முதல்வரின் ஆணைப்படி புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் வளர்ச்சி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின், கீழ் ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாத காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெற வழி வகை செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும், தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில், 25 சதவீதம் அதிகபட்சமாக, 25 லட்ச ரூபாய் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஐ.டி.ஐ., டிப்ளமோ இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருத்தல் வேண்டும். 21 வயதிலிருந்து, 35 வயது வரை இருக்க வேண்டும்.

சிறப்பு பிரிவினர்களான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது, 45 ஆகும். பயனாளி கடந்த மூன்று ஆண்டுக்கு மேலாக தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.

இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம், 5 லட்ச ரூபாய்க்கு மேல் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில் மற்றும் சேவை தொழில் துவங்கலாம். பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில், 10 சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில், 5 சதவீதம் செலுத்த வேண்டும்.

வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும். தகுதியுள்ள படித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியுடைய , தொழில் துவங்க ஆர்வமுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us