UPDATED : ஏப் 16, 2013 12:00 AM
ADDED : ஏப் 16, 2013 12:56 PM
அ நிறம் | அளவு
ஒரு துறையில் நிபுணத்துவம் பெற
இந்தியாவில் இது போன்ற படிப்புகளுக்கு
, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாமல், சாதித்து வரும் அத்தகைய கல்வி நிறுவனங்களில் கட்டணமும் குறைவு, வேலை வாய்ப்புகள் அதிகம்.அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான்
"மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்" (சி.பி.ஆர்.ஐ.,)கட்டடக் கலை அறிவியலில்
, மேம்பாடு, தொழில்நுட்பம், தொழில் திறன் ஆகியவற்றை புகுத்துவது போன்றவை இங்கு கற்றுத் தரப்படுகின்றன.இந்நிறுவனம் உத்தரகண்ட் மாநிலம்
, ரூர்க்கியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் உள்நாடு, வெளிநாட்டு அளவில் பெரிய அமைப்புகளுடன் ஒப்பந்தம் மேற்க்கொண்டுள்ளது.இங்கு பலவிதமான ஆராய்ச்சி பிரிவில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன
. உள்கட்டமைப்பு மற்றும் பேரிடர் குறைப்பு என்ற பெயரில் இரண்டாண்டு முதுகலை படிப்பும் வழங்குப்படுகிறது. இன்ஜினியர்கள், கட்டடக்கலை நிபுணர், கைவினைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் போன்றவர்களுக்கு பல்வேறு பயிற்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.மேலும் இந்நிறுவனம் பற்றிய தகவல்களை
www.cbri.res.in என்ற இணையதள முகவரியில் பெறலாம்.