தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விழுப்புரத்தில் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு

விழுப்புரத்தில் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு

விழுப்புரத்தில் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு


UPDATED : நவ 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


விழுப்புரம்:
இரண்டாம் நிலை போலீசாருக்கான தகுதிப் போட்டிகள் விழுப்புரத்தில் நவ., 11ம் தேதி நடந்தது.
விழுப்புரம் சரகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கடந்த 7ம் தேதி முதல் இரண்டாம் நிலை போலீசார் தேர்வு நடந்து வருகிறது. காகுப்பம் போலீஸ் மைதானத்தில் 7, 8, 10 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவு மற்றும் ஆண்களுக்கு 1500 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கு 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டன.
மேலும் கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டும் போட்டிகள் முதல் நடந்து வருகிறது. 13ம் தேதி அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
தகுதி தேர்வுகளின்போது சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி., ராஜேந்திரன், டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அமல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடந்த ஆண்டு வரை போலீசாருக்கான தேர்வுகள் 15 முதல் 20 நாட்கள் நடக்கும்.
அதன்படி முதலில் உடல் தேர்வு, உயரம், ஓட்டம்  போட்டிகள் நடத்தி அதில் தேர்வானவர்களுக்கு பின்னர் எழுத்து தேர்வு நடத்தப்படும். அதிக நாட்கள் வீணாவதை தடுக்க இந்த ஆண்டு, முதலில் எழுத்து தேர்வு நடத்தி தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வானவர்களுக்கு உடல் தேர்வு, உயரம், ஓட்ட தேர்வுகள் நடக்கிறது. இதனால் இந்த ஆண்டு போலீஸ் தேர்வு பணிகள் 6 நாட்களில் முடிவடைய உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us