தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கவர்னரிடமே பட்டத்தை திருப்பிகொடுத்த மாணவி: பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு!

கவர்னரிடமே பட்டத்தை திருப்பிகொடுத்த மாணவி: பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு!

கவர்னரிடமே பட்டத்தை திருப்பிகொடுத்த மாணவி: பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு!


UPDATED : நவ 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை வகித்து பட்டங்களை வழங்கிக்கொண்டிருந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சேர்ந்த பிருந்தா(33) என்பவருக்கு பிஎச்.டி., பட்டம் வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டார். மேடையேறிய பிருந்தா கவர்னரிடம் கோரிக்கை மனுவை அளிக்க முற்பட்டார். விழா முடிந்ததும் மனுவை கவர்னரிடம் வழங்குமாறு கூறப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி பிருந்தா கவர்னரிடம் வாங்கிய பட்டத்தை, அடுத்தநொடியே அனைவர் முன்னிலையிலும் கவர்னரிடமே திருப்பிக்கொடுத்துவிட்டு மேடையில் இருந்து இறங்கினார். இதனால், விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்ததால் மேலும், பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிருந்தாவும் அவரது தந்தையும் கவர்னரின் அறையில் சென்று சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து பிருந்தா கூறியதாவது: நான் விலங்கியல் துறையில் பிஎச்.டி., முடித்துள்ளேன். ஆனால், எனக்கு ‘கோஸ்டல் அக்வாகல்ச்சர்’ பாடப்பிரிவில் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சில வாரங்களில் லண்டனில் எனக்கு கிடைத்துள்ள கல்லூரி ஆசிரியர் பணிக்கு சேர உள்ளேன். இந்நிலையில், எனக்கு பட்டம் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, எனது புரொவிஷனல் சர்டிபிகேட்டில் ‘காமர்ஸ்’ என்று குறிப்பிடப்பட்டது. பல்கலைக்கழகத்தில் முறையிட்ட பிறகு திருத்தி வழங்கப்பட்டது. அதன்பிறகு, துபாயில் நான் கல்லூரி ஆசிரியராக இருந்தபோது, பிஎச்.டி., பட்டியலிலேயே எனது பெயர் இல்லை என்று கூறப்பட்டது. அதனால், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு இந்தியா வந்தேன். பல்கலையில் புகார் செய்தையடுத்து, எனக்கு பிஎச்.டி., பட்டம் வழங்கப்படும் என்று தெரித்தனர்.
இந்நிலையில், எனக்கு பிஎச்.டி., பாடப்பிரிவு மாற்றி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் பலமுறை பல்கலை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது.
பதில் அளிக்க கவர்னர் உத்தரவு: மாணவி பிருந்தா கூறியுள்ள இந்த குற்றச்சாட்டுக்கு, உரிய பதில் அளிக்க கவர்னர் பர்னாலா, பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us