UPDATED : நவ 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
டொரன்டோ: எந்த ஒரு விஷயத்திலும் சாதகமாகவோ, பாதகமாகவோ முடிவு தெரிகிறதே அதனால், பெரிய அளவில் மன அழுத்தம் வராது; ஆனால், எதிர்பார்ப்பு- ஏமாற்றம் இடையே உள்ள நிலை தான் படுமோசமான மன அழுத்தம்!
கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகம் ஒன்றில், இது தொடர்பான ஆராய்ச்சியை மேற் கொண்டனர்.
நிபுணர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல காரணங்களால் மனிதர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் தான் சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு உட்பட பல நோய்களுக்கு முக்கிய காரணம். அதனால், மன அழுத்தம் எந்த வகையிலும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சிறிய விஷயம் கூட ஒருவரை பாதிக்கும்; அதனால் மன அழுத்தம் வரும். ஒரு விஷயத்தில் முடிவு என்னவாகுவோ என்று எதிர்பார்ப்பு இருக்கிறதே... அது தான் மிக முக்கியமான மன அழுத்தத்துக்கு அறிகுறி.
சாதகமாகவோ, பாதகமாகவோ முடிவு வந்தால் கூட, பெரிய அளவில் மன அழுத்தம் ஏற்படாது. ஆனால், எதிர்பார்த்தபடி அமையாமல் இருந்தால் கூட அவ்வளவு மன அழுத்தம் வராது. ஆனால், எதிர்பார்ப்புக்கும், ஏமாற்றத்துக்கும் இடையே உள்ள வாழ்க்கையில் தான் மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
மூளையில் இது தொடர்பான பதிவுகள் அதிகமாக இருக்கும். நிச்சயமற்ற நிலையில் பதிவுகள் அதிகமாகி, மன அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட நிச்சயமற்ற நிலைமை, சாதகமான முடிவை ஏற்படுத்தினால், மன அழுத்தம் குறைவாக உள்ளது. பாதகமாக அமைந்தால் அதிகமாக ஏற்படும்.
எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை உள்ளவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், எதிர்பார்ப்பு வீணாகி விட்டதே என்று எண்ணுவோருக்கு தொல்லை தான். மன அழுத்தம் அதிகமாகி, உடல் நிலை பாதிப்பை ஏற்படுத்தி விடும். இவ்வாறு ஆய்வு அறிக்கையில் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
