தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக பதிப்பாளர்களுக்கு கூலித்தொகை தராமல் இழுத்தடிப்பு?

புத்தக பதிப்பாளர்களுக்கு கூலித்தொகை தராமல் இழுத்தடிப்பு?

புத்தக பதிப்பாளர்களுக்கு கூலித்தொகை தராமல் இழுத்தடிப்பு?


UPDATED : நவ 26, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு புத்தகம் அச்சடித்துக் கொடுக்கும் பதிப்பாளர்களுக்கு, இதுவரை நிதி வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசு பாடநூல் கழகம் ஆண்டுதோறும் மாநில பாடத்திட்டத்திற்குரிய பாடப்புத்தகங்களை தனியாரிடம் கொடுத்து அச்சடிப்பது வழக்கம். பாடப்புத்தகத்தின் உட்புறத் தாள்கள் மற்றும் வெளிப்புற அட்டைகளை அரசே கொடுத்துவிடும். போக்குவரத்து மற்றும் அச்சடிப்பதற்கான கூலி மட்டுமே தனியாருக்கு வழங்கப்படுகிறது.
முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான புத்தகம் மற்றும் அட்டைகள் 130 ‘ஷீட் பெட்’ அச்சகங்களிலும், ஆறாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான புத்தகம் மற்றும் அட்டைகள் 60 ‘வெப் ஆப்செட்’ அச்சகத்திலும் அச்சடிக்கப்படுகின்றன.
மொத்தம் 12 கோடி புத்தகங்கள் அச்சடிக்க 11 ஆயிரம் டன் நியூஸ் பிரின்ட்டை அரசு வழங்கியது. அச்சகத்தினரும் தமிழ்நாடு பாடநூல் புத்தகங்களை அச்சடித்து, அவற்றை ஒப்படைத்துவிட்டனர். பாடப்புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள், அச்சடித்ததற்கான தொகை, போக்குவரத்து செலவுகள் கொடுக்கப்படும் என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அரசு உத்தரவுப்படி 48 மணி நேரத்திற்குள் தரப்படுவதில்லை. இருந்தாலும், இதுவரை ஒரு வாரத்துக்கு உள்ளாகவே வழங்கப்பட்டு வந்தது. இம்முறை மூன்று வாரங்களுக்கு மேலாகியும் அச்சகத்தினருக்கு சேர வேண்டிய தொகை இதுவரை கிடைக்கவில்லை. மொத்தம் 3 கோடி ரூபாய்க்கு மேல் அரசு தரவேண்டி உள்ளது என அச்சக அதிபர்கள் புலம்புகின்றனர்.
அரசிடம் இருந்து வரவேண்டிய பணம் காலதாமதமாகி வருவதால், தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதுபோல் தமிழ்நாடு நியூஸ் பிரின்ட் (டி.என். பி.எல்.,) நிறுவனத்திற்கும் தமிழ்நாடு பாடநூல் கழகம் பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் தரமணியில் உள்ள அரசு குடோனில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளன. குடோனில் போதுமான இடமில்லாததால் குடோனுக்கு வெளியே பாதுகாப்பின்றி புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளின் அஜாக்கிரதையால் புத்தகக் குடோனில் திடீர் தீவிபத்து மற்றும் மழையால் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
புத்தகங்கள் அச்சடித்த அச்சகத்தினருக்கு சேர வேண்டிய தொகை கிடைக்கவும் வழி செய்யாமல், அச்சடித்த புத்தகங்களை பாதுகாக்கவும் முடியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பாடநூல் கழகம் விழித்துக் கொள்ளுமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us