2015ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 97 சதவீத மாணவர் சேர்க்கை!
2015ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 97 சதவீத மாணவர் சேர்க்கை!
UPDATED : நவ 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகள் மொத்தம் 17 உள்ளன. அதில் பங்களாதேஷ், பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் முன்னேறி வருவதாகவும், இவற்றில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2006ம் ஆண்டு 72 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில், 2015ம் ஆண்டிற்குள் 6 லட்சமாக குறையும். மேல்நிலைக்கல்வியை பொறுத்தவரை, 1999ல் 39 சதவீதம் மாணவர் சேர்க்கை உயர்ந்தது. இது 2006ம் ஆண்டில் 43 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உலகளவில் நைஜீரியாவில் தான் அதிக குழந்தைகள் கல்வி பெறாமல் உள்ளனர். இந்நாட்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 76 லட்சம்.
மோசமான கல்வித்தரம் கொண்டுள்ள அரசு பள்ளிகள் தான் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்க காரணம்.
இந்தியாவில் கிராமப்புற பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் முறையாக பயிற்சி பெறாதவர்கள் அதிகளவில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். அனைத்து பகுதிகளிலும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அந்த ஆய்வு அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 65 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
