தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ‘யோகா’ பயிற்சி

புதிய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ‘யோகா’ பயிற்சி

புதிய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ‘யோகா’ பயிற்சி


UPDATED : நவ 28, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு நவ. 28ம் தேதி முதல் நான்கு கட்டங்களாக யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்படி தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளின் சக ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு இப்பயிற்சியை அளிக்கின்றனர்.
இந்நிலையில், இந்தாண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு நான்கு கட்டங்களாக யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. பொள்ளாச்சி ஆழியாறில் உள்ள அறிவுத் திருக்கோவிலில் டிச. 2 வரை முதல் கட்ட பயிற்சி துவங்குகிறது. இதில் கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர் ஆகிய ஆறு மாவட்டங்களை சேர்ந்த 150 ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
டிச. 4 முதல் 8 வரை நடைபெறவுள்ள இரண்டாவது கட்ட பயிற்சியில், 100 ஆசிரியர்களுக்கும், டிச. 28, 29, 30, 31 மற்றும் ஜன. 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட பயிற்சியில் 500 ஆசிரியர்களுக்கும், ஜன. 9 முதல் 13 வரை நடைபெறவுள்ள நான்காம் கட்ட பயிற்சியில் 250 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us