இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் கண்காணிப்பு?
இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் கண்காணிப்பு?
UPDATED : டிச 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: இந்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது தொடர்பாக, டில்லியில் டிச. 10ம் தேதி விவாதிக்கப்படுகிறது.
மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை கண்காணிப்பது தொடர்பாக விவாதிக்க, பிரதமர் அலுவலக அதிகாரிகளும், பல்கலைக் கழக துணைவேந்தர்களும் கலந்துகொள்ளும் கூட்டம் டில்லியில், டிச.10ம் தேதி நடக்கிறது.
இக்கூட்டத்தில் இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. டில்லியில் நடக்கவுள்ள கூட்டத்தில் 12 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் மட்டும் 400 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். தனியார் பல்கலைக் கழகங்களிலும் அதிகளவில் வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருவதால், இங்குள்ள மாணவர்களைக் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
