UPDATED : செப் 26, 2013 12:00 AM
ADDED : செப் 26, 2013 10:56 AM
விருதுநகர்: "விருதுநகர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய "மரைன்" இலவச தனித்திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது" என கலெக்டர் ஹரிஹரன் கூறினார்.
அவரது செய்திக்குறிப்பு: 2013-2014ம் ஆண்டிற்கு, விருதுநகர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேல் 35 வயதிற்குட்பட்ட 10ம்வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய மரைன் சம்பந்தப்பட்ட தனித்திறன் பயிற்சிகள், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம் மூலம், முற்றிலும் இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டிப்ளமோ இன் மரைன் மெக்கானிக்கல் பிட்டர், டிப்ளமோ இன் மரைன் பைப் பிட்டர், டிப்ளமோ இன் மரைன் எலக்ட்ரிக்கல் பிட்டர், டிப்ளமோ இன் மரைன் வெல்டர், டிப்ளமோ இன் மெக்கானிஸ்ட் பிரிவுக்கு, ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ்களுடன் (1 செட் ஜெராக்ஸ் சான்று, குடும்ப அடையாள அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போட் சைஸ் புகைப்படம்) செப்.,28 காலை 10 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
