தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாதுகாப்பு குறித்த படிப்பு: அறிமுகப்படுத்துகிறது இக்னோ!

பாதுகாப்பு குறித்த படிப்பு: அறிமுகப்படுத்துகிறது இக்னோ!

பாதுகாப்பு குறித்த படிப்பு: அறிமுகப்படுத்துகிறது இக்னோ!


UPDATED : டிச 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பயங்கரவாதிகளின் மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும் பாதுகாப்பு திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு திறன் குறித்த பாடத்திட்டத்தை வழங்க இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தை இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொணடது.
அதன்படி, இரண்டு வகையான பாடத்திட்டத்தை பரிசார்த்த முறையில் இக்னோ அறிமுகப்படுத்த உள்ளது. கிராமப்புற பகுதிகளில் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள பாதுகாப்பு பணியாளர்களுக்கு கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் பாதுகாப்பு திறன் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இரண்டாவதாக, ஹோட்டல், திரையரங்கு, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்றவற்றில் மேற்பார்வையாளர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு ரூ.15 ஆயிரம் கட்டணத்தில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்பு வழங்கப்பட உள்ளது.
அவசர தருணங்களில் செயல்படும் விதம், மோப்ப நாய்களை கையாள்வது போன்றவை குறித்து இப்படிப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. செக்யூரிட்டி ஆப்ரேஷன்ஸ் பிரிவில் ஓர் ஆண்டு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பாதுகாப்பு ஏஜென்சிகளில் மேற்பார்வையாளராக பணி பெறவும் முடியும்.
‘முன்பே இப்படிப்புகளை வழங்க திட்டமிடப்பட்டது. சமீபத்திய மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக வழங்குவதில் உத்வேகம் ஏற்பட்டுள்ளது’ என்று பல்கலைக்கழக தொழில்கல்வி மற்றும் பயிற்சி துறை இயக்குனர் நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் இம்மாத இறுதியிலும், தமிழகம், ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் 2009, ஜூலையிலும் இப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us